"5 போட்டிகளில் 4 சதங்கள்"- சாதனைப் படைத்தார் மார்னஸ் லபூஷேன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.


Advertisement

Image

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஜோ பர்ன்ஸ் 18 ரன்களிலும் வார்னர் 45 ரன்களிலும் வெகு விரைவாகவே ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபூஷேன் - ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நியூஸிலாந்து பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டது. ஸ்மித் மிகப் பொறுமையுடன் தன்னுடைய முதல் ரன்னை 38 பந்துகளை எதிர்கொண்ட பின்பே அடித்தார். அத்தனை பொறுமையாக விளையாடிய ஸ்மித் 143 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார்.


Advertisement

Image

25 வயது மார்னஸ் லபூஷேன், இதுவரை 13 டெஸ்டுகளில் விளையாடி 3 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். கடந்த நான்கு டெஸ்டுகளில் மூன்று சதங்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஸ்மித்துக்கு ஈடுகொடுத்து பொறுமையாக விளையாடிய லபூஷேன் சதமடித்தார். இந்த சதத்தில் மொத்தம் 1 சிக்ஸக், 8 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் கடந்த 7 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் எடுத்து அசத்தியுள்ளார் லபூஷேன். இதற்கு முன்பு ரிக்கி பாண்டிங், டான் பிராட்மேன் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து சாதித்துள்ளனர்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement