தேர்தல் ஆணைய இணையதளத்தில் பெரம்பலூர் முடிவுகள் இல்லை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட்ட தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில், பெரம்பலூர் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவே இல்லை.


Advertisement

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல், டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும்‌ பணிகள் நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி, தற்போதும் விடிய விடிய நடைபெற்று வருகிறது. அறிவிக்கப்பட்ட தேர்தல்‌ முடிவுகள், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

Image result for tamil nadu election commission result


Advertisement

மாவட்ட‌ வாரியாகவும், உள்ளாட்சிப் பதவிகள் வாரியாகவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் பட்டியலில் பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவே இல்லை. மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்‌, ஊராட்சித் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான கட்டங்கள் அனைத்திலும் பூஜ்ஜியங்களே நிரம்பியிருந்தன. இதனால் தங்கள் மாவட்ட தேர்தல் முடிவுகளை பார்க்க விரும்பிய பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

நள்ளிரவில் மீண்டும் தேர்தல் ஆணையரை சந்தித்த ஸ்டாலின்..

loading...

Advertisement

Advertisement

Advertisement