தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கம், சென்னை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதி, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தின் கீழ் பகுதியில் கிழக்கு திசைக் காற்றும் மேற்கு திசைக் காற்றும் தமிழகப் பகுதியில் சந்தித்துக் கொள்வதால் பரவலாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழை வரும் 5ஆம் தேதி நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதுவரை லேசானமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(இதனையும் படிக்கலாமே..‘சூர்யாவும்.. சிட்டுக்குருவியும்’ - சூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு )
இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர், பாலச்சந்திரன், “வடகிழக்கு பருவமழை காலங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட 2 சதவிகிதம் மழை அதிகமாக பெய்துள்ளது. இதனிடையே அதிகபட்சமாக செம்மஞ்சேரியில் 4 சென்டி மீட்டரும் மீனம்பாக்கம், கொளப்பாக்கம் மற்றும் குன்னூரில் தலா 3 சென்டி மீட்டரும் மழையும் பதிவாகியுள்ளது” என்றார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்