“என்.ஆர்.சி-க்கும் என்.பி.ஆர்-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை” - அமித்ஷா விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இடையே எவ்வித தொடர்புமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


Advertisement

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏஎன் ஐ-க்கு அளித்த பேட்டியில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மற்றும் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மத்திய அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ எதுவும் விவாதிக்கப்படவில்லை. தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதனை இன்று நான் தெளிவாக கூறுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “என்.பி.ஆர்க்கு எதிரான முடிவை கேரளா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதுபோன்ற முடிவினை எடுக்க வேண்டாம். உங்களுடைய அரசியலுக்காக ஏழைகளை வளர்ச்சியில் இருந்து தடுக்காதீர்கள்” என்றார் அமித்ஷா.


Advertisement

 

loading...
Related Tags : NRCNPRAmit Shah

Advertisement

Advertisement

Advertisement