தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திர சவாலுக்கு தடை இல்லை

EVM-challenge-tomorrow-as-scheduled--court-rejects-PIL-seeking-stay

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து ஹேக் செய்யும் தேர்தல் ஆணையத்தின் சவால் நிகழ்வுக்கு தடை விதிக்க உத்தராகண்ட் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


Advertisement

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சவால் விடுத்திருந்தது. இந்த நிகழ்வு டெல்லியில் நாளை நடைபெற உள்ளநிலையில், தேர்தல் அதற்குத் தடை விதிக்கக் கோரி உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் சவால் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திர சவால் நிகழ்வு திட்டமிட்டபடி நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சவாலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ள இருக்கின்றன.  சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டிருந்ததாக ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன. இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகளை நிகழ்த்த முடியாது எனக் கூறியது. சமீபத்தில் சர்வதேச தொலைகாட்சி ஒன்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகளை செய்ய முடியும் என வீடியோவுடன் நிரூபித்து செய்தி வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து பல கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்தன. மேலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தின் தலைமை செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை அக்கட்சிகள் முன்வைத்தன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. நாளை பொதுவில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் (ஹேக்) செய்து காட்டலாம் என்றும், இதில் அரசியல் கட்சியினர், மாணவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement