டெல்டா மாவட்டங்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்த நெல் உற்பத்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெல் உற்பத்தி குறைந்துள்ளது.


Advertisement

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் இருந்து பிரத்யேகமாக புதிய தலைமுறைக்கு கிடைத்த தகவல்களை இப்போது பார்க்கலாம். தமிழகத்தின் 120 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதால், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டிய நீரை தர மறுத்ததால், கடந்த ஆண்டைக் காட்டிலும் 86 சதவீதம் வரை நெல் உற்பத்தி குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் 2015-2016 ம் ஆண்டில், 4-5 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் உற்பத்‌தி இருந்தது. அதேநேரத்தில் நடப்பாண்டை பொறுத்தவரை 72,756 மெட்ரிக் டன் மட்டுமே நெல் உற்பத்தியாகியுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் சரிவை கணக்கிட்டால், 84 சதவிகிதமாக இருக்கிறது. நாகை மாவட்டத்தில் 2015-2016 ம் ஆண்டில், 3,16,000 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்தது. ஆனால், 2016-2017ம் ஆண்டிலோ 16,235 மெட்ரிக் டன் மட்டுமே நெல் உற்பத்தியாகியுள்ளது. ஓராண்டில் நாகை மாவட்டத்தில் நெல் உற்பத்தியானது 95 சதவிகிதம் சரிந்திருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் 2015-2016 ம் ஆண்டில், 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்‌தியான நிலையில், இவ்வாண்டை பொறுத்தவரை 1,11,000 மெட்ரிக் டன் மட்டுமே நெல் உற்பத்தியாகிருக்கிறது. ஓராண்டில் திருவாரூரில் 78 சதவிகிதம் அளவிற்கு நெல் உற்பத்தி குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அளவில் கடந்த அரைசந்தை ஆண்டில் 8 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலும், இந்த அரைசந்தை ஆண்டில் 1 லட்சத்து 37 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி மொத்தத்தில் 86 சதவிகிதம் அளவிற்கு நெல் உற்பத்தி குறைந்திருக்கிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement