பொள்ளாச்சியில் மாமியாரை தலையில் கடித்த மருமகள் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொழில்பேட்டை மின் நகரை சேர்ந்த சரவணகுமார், கல்பனா தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. கல்பனாவிற்கு மாமியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது தாய் வீடுள்ள சின்னம்பாளையத்தில் கணவருடன் குடியேறினர்.
குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்யும் சரவணகுமார், மின்நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். கணவரை அழைக்கச் செல்லும் போதெல்லாம் கல்பனாவுக்கும், அவரது மாமியார் நாகேஸ்வரிக்கும் தகராறு ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்ததாக கூறப்படுகிறுது. இந்தமுறையும் கணவரை அழைக்கச் சென்ற கல்பனாவுக்கும், மாமியார் நாகேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியாரின் தலையை கல்பனா பலமாக கடித்துள்ளார்.
&
ரத்தம் கொட்டக்கொட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாகேஸ்வரிக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன. இதையடுத்து நாகேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்த மகாலிங்கபுரம் காவல்துறையினர், கல்பனாவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?