34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்
பின்லாந்தில் தற்போது 5 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்தக் கூட்டணிக்கு சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமை வகிக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி மீது விமர்சனங்கள் எழுந்தன. தபால்துறை வேலை நிறுத்தம் தொடர்பாக ஆண்டி ரின்னி சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், பிரச்னையை சரியாக கையாளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. தொடர் எதிர்ப்பு காரணமாக தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்டி ரின்னி.
இதனையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதே கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த, 34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 34 வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள சன்னா மரின் உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் இன்னும் சில நாட்களில் பிரதமராக பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சன்னா மரின், மக்களின் நம்பிக்கையைப் பெற நாங்கள் அதிகம் உழைக்க வேண்டி உள்ளது. என் வயது குறித்தும், என் பாலினம் குறித்தும் நான் எதுவும் யோசிக்கவில்லை. என் கவனம் முழுவதும் மக்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கை குறித்தும், நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் குறித்துமே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!