ரிஷப் பன்டிற்கு பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியிலும் விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் இடம்பெற்றுள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணி தோனியை தாண்டி தற்போது புதிய கீப்பரை தேர்வு செய்யும் படலத்தில் இறங்கியுள்ளது. இதற்காக இளம் வீரர் ரிஷப் பன்டிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரிஷப் பன்ட் டெல்லி அணிக்காக ரஞ்சி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். அத்துடன் அவரும் தோனியை போல அதிரடியாக விளையாடும் திறன் பெற்று இருந்தார். ஆகவே தோனிக்கு சரியான மாற்று வீரராக இவர் இருப்பார் என்று இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனினும் அணி நிர்வாகம் நினைத்தது போல ரிஷப் பன்ட் சரியாக விளையாட வில்லை. இவர் பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா தொடர்களில் சிறப்பாக சோபிக்கவில்லை. ஆகவே இவரை தொடர்ந்து அணியில் வைப்பதற்கு பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பதிலாக கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ரிஷப் பன்ட் களமிறங்கும் போது அவரை தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கூச்சலிடுவதாக இந்திய கேப்டன் விராட் கோலி வருத்தம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர், “ரிஷாப் பன்ட்-ஐ நாங்கள் நம்புகிறோம். ஆனால், சிறப்பாக விளையாட நாம் அனைவரும் அவருக்கு சில வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ரிஷாப் தனது வாய்ப்பை தவறவிடும் போதெல்லாம், எப்போதும் போல மைதானத்தில் தோனியின் பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள். அது மரியாதையான செயல் அல்ல. எந்த வீரரும் இதனை விரும்பமாட்டார். ரிஷாப் தவறு செய்தாலும் அவர் நமது நாட்டிற்காக விளையாடுகிறார் என நினைத்து ஆதரவளிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்நிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி ரிஷப் பன்டிற்கு சில அறிவுரை வழங்கியுள்ளார். அதில், “ரிஷப் பன்ட் விளையாடும் போது வாய்ப்பை தவறவிட்டால் ‘தோனி தோனி’ என்று ரசிகர்கள் கத்துவது பன்டிற்கு நல்லது தான். அவர் அதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இதனைக் கேட்டே ரிஷப் பன்ட் தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். இதனால் பன்ட் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்படுவார். அப்போது தான் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
தினமும் தோனியை போல ஒரு வீரர் கிடைப்பது கடினம். ரிஷப் பன்ட் தோனியை போல ஆகவேண்டும் என்றால் அவருக்கு 15 ஆண்டுகள் தேவைப்படும். ஏனென்றால் தோனி அத்தகைய சாதனையை படைத்துள்ளார். தோனி செய்த சாதனைகளுக்கு பிசிசிஐ எப்போதுமே நன்றி கடன் பட்டுள்ளது. தோனியின் வருங்காலம் குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Loading More post
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி