9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? : உச்சநீதிமன்றம் கேள்வி 

Postpone-local-elections-in-9-districts--Supreme-Court-Question

வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுவரையறை முழுமையாக முடியும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தது. 


Advertisement

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வருகிறது. அப்போது வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம் என தமிழக அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக பிற்பகல் 2 மணிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement