[X] Close >

செவிலியரான முதல் திருநங்கை - மகன், மகளாக மாறியதாக தாய் நெகிழ்ச்சி 

The-first-transgender-nurse-is-anbu-ruby

புறக்கணிப்புக்குள்ளாகும் திருநங்கை சமூகத்தில் இருந்து, பல தடைகளைக் கடந்து, இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார், அன்பு ரூபி. 


Advertisement

தூத்துக்குடி, சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளியான ரத்ன பாண்டி - தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். பதின்ம வயதில் அவருக்கு உளவியல் மாற்றமும், உடல்ரீதியான‌ மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. பின்னர் திருநங்கையாக மாறிய அன்புராஜ், தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார். பொது சமூகத்தின் புறக்கணிப்பு, உறவினர்களின் நிராகரிப்பு, நண்பர்களின் கேலி கிண்டல்கள் அத்தனையையும் கடந்து, நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார் அன்புரூபி. 


Advertisement

பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் கைமேல் பலன் கிடைத்ததைப் போல், கடும் உழைப்பால் முன்னுக்கு வந்த அன்பு ரூபிக்கு சொந்த ஊரிலேயே செவிலியர் பணி வழங்கி கவுரவித்திருக்கிறது தமிழக அரசு.

அன்புரூபி இந்த நிலையை எட்டியதற்கு, அவரின் தாய் தேன்மொழியின் பங்கு மிக மிக முக்கியமானது. திருநங்கையாக மாறிய மகனின் மனநிலையை புரிந்து கொண்டு, அவரின் எதிர்கால வாழ்வுக்கும், வெற்றிக்கும் துணை நின்ற இந்த அபூர்வத்தாய், வாழ்வின் காயங்களை வார்த்தைகளால் விவரிக்கிறார்.


Advertisement

இதையும் படிக்கலாமே : டியூசன் சென்று திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை - 73 வயது முதியவர் கைது

மாற்றுப் பாலினத்தவர்களை புறக்கணிக்கக்கூடாது எனவும் மகன், மகளாக மாறியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் எனவும் தேன்மொழி தெரிவிக்கிறார். அறிவும், திறமையும் பால் பேதமற்றவை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் அன்புரூபி. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close