இன்று ஆஜராகிறார் அத்வானி: புதிய குற்றச்சாட்டுகள் பதிவு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். மத்திய அமைச்சர் உமா பாரதி, பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரும் ஆஜராக உள்ளனர். அப்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.


Advertisement

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை தொடர உத்தரவிட்டதுடன் 2 ஆண்டுகளில் வழக்கை முடிக்கவும் அறிவுறுத்தியது.

அதன்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணையின் போது அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் வரும் 30-ம் தேதி நேரில் தவறாமல் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement