மகாராஷ்டிர இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்தது. சிவசேனா மற்றும் பாஜக இடையில் போட்டி நிலவியது. சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்திற்கு வழக்குகள் சென்று, நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பதற்கும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இடைக்கால சபாநாயகர் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது.


Advertisement

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் மாளிகையில் சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். இவர் எம்.எல்.ஏக்களுக்கு நாளை பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிகிறது. 

முன்னதாக, தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல்வர் பதவியையும், அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement