புதிதாக வாங்கிய ஜியோமி 7 எஸ் ஸ்மார்ட்போன் வெடித்ததற்கு வாடிக்கையாளரே காரணம் என்று அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஈஷ்வர் செளஹான் என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலம் ஜியோமி 7 எஸ் போனை வங்கினேன். அது நவம்பர் 2ஆம் தேதி வரை நன்றாக செயல்பட்டது. பின்னர் ஒரு நாள் போனை மேஜை மீது வைத்திருந்த போது, அதிலிருந்து தீ பற்றிய வாடை வந்தது. திடீரென தீப்பற்றி எரியவும் தொடங்கியது. போன் மோசமான நிலையில் இருந்ததால் அவரால் சிம் கார்டை கழற்ற முடியவில்லை” என ஈஷ்வர் கூறியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து ஈஷ்வர் சௌஹான், ஜியோமி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு விளக்கமளித்துள்ள ஜியோமி நிறுவனம், “இந்த குற்றச்சாற்றில் உண்மையில்லை. போன் தயாரிப்பில் எவ்வித குறைபாடும் இல்லை. வாடிக்கையாளர் ஏற்படுத்திய சேதமே போன் வெடித்ததற்கு காரணம்” என்று தெரிவித்திருக்கிறது. மேலும் செல்போனை தலையணைகளுக்கு அடியில் வைத்து தூங்குவது, இரவு முழுவதும் சார்ஜ் செய்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!