JUST IN

Advertisement

தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் தன் புகைப்படத்தை திமுகவினர் பயன்படுத்த வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement

திமுகவின் இளைஞரணி செயலாளராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளில் தன் புகைப்படத்தை திமுகவினர் பயன்படுத்த வேண்டாம் என ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான பதிவில், “ இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது.


Advertisement

மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement