சாம்பியன்ஷிப் கார் பந்தயம்: 6ஆவது முறை பட்டத்தை உறுதி செய்த ஹாமில்டன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக சாம்பியன்ஷிப் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், பிரிட்டன் வீரர் ஹாமில்டன் ஆறாவது முறையாக பட்டத்தை உறுதி செய்துள்ளார். ‌


Advertisement

நடப்பு ஆண்டிற்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் 19-ஆவது சுற்றுப் பந்தயம் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் முதலிடம் பிடித்தார். மெர்சிடஸ் அணி வீரரான ஹாமில்டன், இரண்டாவது இடம் பிடித்தார். இதுவரை 381 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும் ஹாமில்டன், இன்னும் இரண்டு சுற்றுப் பந்தயங்கள் மீதமுள்ள நிலையிலேயே ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். 


Advertisement

உலக சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில், முன்னாள் வீரர் மைக்கேல் ஷூமாக்கருக்கு பிறகு அதிக பட்டங்களை வென்றவர் என்ற சிறப்பை பெறவுள்ளார். ஷூமாக்கர் 7 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement