பாஜக அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது: கனிமொழி

Kanimozhi-about-BJP-govt

தமிழர்களின் அடையாளங்களை பாஜக அரசு அழிக்க நினைக்கிறது என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.


Advertisement

புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கனிமொழி, “தமிழர்களுக்கு என தனி அடையாளம் இருக்கிறது. பாஜக அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது. திமுக இந்தி திணிப்பை மட்டும் எதிர்க்கவில்லை. கலாச்சாரம், கல்வி, மொழி, மதம் என அனைத்து திணிப்புகளையும் எதிர்க்கிறது. தமிழர்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்தால் தோற்றுப்போகும். செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இனி மனிதனால் வாழ முடியாது. இவைகள் எல்லாம் மனிதர்களை சிந்திக்கத் தூண்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் பேர் பெரிய அளவில் டாக்டர்களாக உள்ளார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் திமுக கொண்டு வந்த இடஒதுக்கீடுதான். நீட் தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியுமா? தமிழகத்திற்கு தற்போது நீட் தேர்வுக்கு என்ன அவசியம் வந்தது? இந்தியா ஒருங்கிணைந்த தேசம் என்று பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் தண்ணீர் கேட்கும்போது இது இரு மாநிலப் பிரச்னை என்று கூறுகின்றனர். விவசாயிகளை சந்திக்க பிரதமர் மோடி மறுக்கிறார். மத்திய அரசு தமிழக விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கக் கூட மறுக்கிறது.


Advertisement

தமிழகத்தில் இந்தி மொழியை திணித்தால் கண்டிப்பாக புரட்சி வெடிக்கும். மொழிக்காக பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்திருக்கும். ஆனால் தமிழகத்தில்தான் தமிழுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசின் அறிவிப்புகளை இந்தியில் அறிவிக்கின்றனர். தேர்வுகளையும் இந்தியில் நடத்துகின்றனர். பாஜக பிரமுகர்கள் இந்தியில் பேசுகின்றனர். இது அனைவருக்கும் உகந்ததாக இல்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்று கனிமொழி பேசினார்.

Related Tags : party DMK Tamil nadu govt BJP speech kanimozhi
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement