[X] Close >

இன்றைய முக்கியச் செய்திகள்!  

today-head-lines

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மதச்சாயம் பூசுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.


Advertisement

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம். நேபாள எல்லை வழியாக ஊடுருவ முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு முகமை எச்சரிக்கை.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.


Advertisement

நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல். பணப்பட்டுவாடா செய்ய முயன்ற 5 பேரிடம் விசாரணை.

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இறுதிக்கட்ட பரப்புரை. முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் ஸ்டாலினும் தீவிர வாக்குசேகரிப்பு.


Advertisement

எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு. பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு. இந்‌திய ராணுவம் கடும் கண்டனம்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம். அரசியல் கட்சிகளின் சின்னங்கள் விவரத்தை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு. ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிப்பு.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு. கல்லீரல் பிரச்னையால் மூன்று நாட்களாக மருத்துவமனையில் அனுமதி.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close