[X] Close >

டெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்

4-Year-old-Girl-die-for-Dengue-fever-in-Vellore---Govt-fined-Rs-1-Lakh-for-her-School

வேலூரில் 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், அவர் பயின்ற பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


Advertisement

வேலூர் மாவட்டம் வெட்டுவானம் பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த 4 வயது சிறுமி நட்சத்திரா. இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிரிழந்தார். இதையடுத்து அச்சிறுமி படித்த வெட்டுவானம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வின் முடிவில் பள்ளியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வேலூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் உத்தரவிட்டார். மேலும், பள்ளியில் பயிலும் 2 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை மீட்டு சிகிச்சை அனுப்பி வைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close