4 ஆண்டுகளாக பழகிய பெண்ணை ஏமாற்ற முயன்ற துணை ஆட்சியர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேசத்தில், திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பெண்ணை ஏமாற்ற முற்பட்ட துணை ஆட்சியருக்கு அதே பெண்ணுடன் அவசரத் திருமணம் நடைபெற்றது. 


Advertisement

கோரக்பூரின் துணை ஆட்சியராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் தினேஷ் குமார். ஏற்கெனவே விவாகரத்து பெற்ற இவர், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கோரக்பூர் குஷி நகருக்கு மாற்றலாகி சென்ற தினேஷ், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 


Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கோரக்பூர் ஆட்சியர் அனில் குமார் சிங்கிடம், தினேஷ் தன்னை ஏமாற்றியது குறித்து முறையிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக தினேஷ் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, பெண்ணிடம் அவர் பழகியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து நள்ளிரவு வேளையில் தினேஷ் குமாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் அவ‌சரத் திருமணம் நடந்துள்ளது. இதற்கு ஆட்சியர் அனில் குமார் சிங் தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement