பாக்., அமைத்த பதுங்கு குழிகள்.. பாய்ந்து தாக்கும் இந்திய ராணுவம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எல்லைக் கட்டுப்பாடுக்கோடு அருகே அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையிலுள்ள பாகிஸ்தான் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Advertisement

எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதில் இந்திய ராணுவப் படையை சேர்ந்த வீரர்கள் மட்டுமில்லாது பல அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்கின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் 2 பேரின் தலையை துண்டித்ததுடன் உடலையும் சிதைத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் காஷ்மீரின் ரஜோரி, நவ்ஷேரா பகுதிகளில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாத ஊடுருவலைத் தடுக்க பாகிஸ்தான் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement