‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை ஆறு மணியிக்கு வெளியாக உள்ளது. இது குறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வாக்கெடுப்பை நடத்தினார்.


Advertisement

‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”நாளை வெளியாகும் ‘பிகில்’ டிரெய்லர் எத்தனை நிமிடங்கள் ஓடக் கூடியதாக இருக்கும் யூகியுங்கள்…?” என ஒரு கேள்வியை கேட்டிருந்தார் அதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 பேர் வாக்களித்துள்ளனர்.


Advertisement

அந்த வாக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அர்ச்சனா கல்பாத்தி இன்று அதற்கான பதிலை ட்வீட் செய்துள்ளார். அதில் ”நேற்றைய வாக்கெடுப்பின் படி கிட்டத்தட்ட 24% பேர் கூறிய பதில்தான் சரி.” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாக்கெடுப்பு முடிவின் படி இன்று வெளியாகும் ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் 2:30 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் என உறுதியாகியுள்ளது.


Advertisement

 மேலும் ரசிகர்கள் எதிர்பாத்த  ’பிகில்’ போஸ்டரும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement