’நான் பார்த்ததில் விஜய் சிறந்த நடிகர்...’: ஜாக்கி ஷெராப் ’பிகில்’ பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’நான் பார்த்ததில் மிகவும் சிறந்த நடிகர் விஜய்’ என்று பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் தெரிவித்துள்ளார்.


Advertisement

’ஆரண்ய காண்டம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப். அடுத்தும் தமிழில் சில படங்களில் நடித்த இவர், இப்போது விஜய் நடிக்கும் ’பிகில்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தீபாவளிக்கு வர இருக்கும் இந்த படம் பற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் பார்த்தில் விஜய் சிறந்த நடிகர் என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

அவர் கூறும்போது, ’’வேலையில் எப்போதும் கவனமாக இருப்பவர் விஜய். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். அதாவது, அர்ப்பணிப்புள்ள இளம் நடிகர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வராதது பற்றி கேட்கிறார்கள். மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். அதனால் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு என்னால் செல்ல முடியவில்லை. ஆனால் விஜய்யை பார்க்கக் கூடியி ருந்த ரசிகர்களைக் கண்டு வியப்படைந்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement