இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் விளக்கப்பட்டது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டு வந்த கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. அந்த வகையில் தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல அனுமதி மாநில அரசு நிவாகம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்தியபால் மாலிக் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் “ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இனி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர ஜம்மு-காஷ்மீர் தயாராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?