ஊடகங்களை தவிர்ப்பது ஏன்? - நயன்தாரா விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிகாரம் என்பது ஏன் எப்போதுமே ஆண்களுக்கானதாக மட்டுமே இருக்கிறது? என நடிகை நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார். வோக் (Vogue) இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. பட வியாபாரத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு போட்டி கொடுக்கும் நயன்தாரா, ஊடகங்கள், ரசிகர்கள் என எவரையும் சந்திக்காமல் இருப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஊடகங்களை தவிர்த்த நயன்தாரா தற்போது வோக் இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அதில், ஊடகங்களை தவிர்ப்பது குறித்த கேள்விக்கு, நான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை எனக் கருதுவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், பலமுறை ஊடகங்களால் தான் தவறாக சித்தரிக்கப்பட்டதும் அதற்கு காரணம் எனவும் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

சினிமாவில் ஆண்களுக்கு மட்டுமே எல்லா அதிகாரங்களும் எப்போதும் ஏன் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ள நயன்தாரா, உண்மையில் பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கத் தயங்குவதே பிரச்னைகளுக்கு காரணம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைக்களங்களில் நடிக்கும்போது வரவேற்பு கிடைக்கும் நிலையில் ஏன் ஹீரோக்கள் மையப்படுத்திய கதைகளங்களில் நடிக்கிறீர்கள் எனும் கேள்விக்கு எவ்வளவு முறைதான் முடியாது என சொல்லிக்கொண்டே இருக்க முடியும் எனவும், சில நேரங்களில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதில்லை என்றும் நயன்தாரா தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement