தலையில் விக் வைத்துக் கொண்டு அதற்குள் தங்கத்தை கடத்திய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கச்சிதமாக கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் நௌஷத். இவர் ஷார்ஷாவில் இருந்து விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். இவரை பார்த்த அதிகாரிகளுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது. பொதுவாக சட்டவிரோதமாக பணத்தையோ தங்கத்தையோ கடத்துபவர்கள் விமான நிலையங்களில் சிக்குவது வழக்கம்தான். கால் பாதத்திலிருந்து மலக்குடல் வரை எங்கு ஒளித்து வைத்து தங்கத்தை கடத்தினாலும் சுங்கத்துறை அதிகாரிகள் கச்சிதமாக கண்டுபிடித்து விடுவார்கள். அப்படித்தான், நௌஷத்தின் கடத்தல் திட்டமும் கச்சிதமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை கடத்த நௌஷத் மற்றவர்களை காட்டிலும் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அதாவது தலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் முடியை வழித்திருக்கிறார். பின் அந்த இடத்தில், தான் கடத்த வேண்டிய தங்கத்தை கச்சிதமாக பொருத்தி அதற்குமேல் தலையில் விக் வைத்து விட்டார். இதனை பார்க்க சாதாரணமாகத் தான் தெரிந்திருக்கிறது. பெரிய அளவில் வித்தியாசம் தெரியாத நிலையிலும், விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் நௌஷத்தின் திட்டத்தை கச்சிதமாக முறியடித்து 1.13 கிலோ தங்கத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Loading More post
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!