டெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 


Advertisement

கிழக்கு டெல்லியின் ஷாதாரா பகுதியில் நேற்று ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியிலுள்ள புதிய உஸ்மான்பூரில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். அப்போது அவர்களை நோக்கி வெள்ளை நிற உடை அணிந்திருந்த நபர் ஒருவர் இவர்களை துரத்துகிறார். 


Advertisement

அப்போது இருசக்கர வாகனத்திலிருந்த இருவர் கீழே விழுகின்றனர். இதனைத் தொடர்ந்து வெள்ளை நிற உடை அணிந்திருந்த நபர் அவர்களில் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். அதன்பின்னர் அவர் துப்பாக்கியால் தாக்குகிறார். இதனையடுத்து அவர் தப்பி ஓடுகிறார். துப்பாக்கி குண்டு முதியவர் மீது படாததால் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தின்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, அச்‌சத்தில் அங்கிருந்து ஓடுவதும் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்‌பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement