“இடைத்தேர்தல்கள் அதிமுகவிற்கு சவால் இல்லை” - முதல்வர் பழனிசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரு தொகுதி இடைத்தேர்தல்களும் அதிமுகவிற்கு சவால் இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

கேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையித்தில் முதலமைச்சர் பழனிசமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நீர்ப் பங்கீடு திட்டங்கள் குறித்து பேச கேரளா செல்கிறேன். இதனால் தமிழகம்- கேரளா இடையே உள்ள  நீர்ப் பங்கீடு பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இருமாநில விவசாயிகளின் நலன் கருதியே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.


Advertisement

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்கள் அதிமுகவிற்கு சவால் இல்லை. இந்தத் தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகள் அளித்து திமுக வெற்றி பெற்றது” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement