[X] Close >

முன்னாள் ஐஜி பாலியல் வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

SC-stays-chennai-High-court-order

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


Advertisement

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி ஆக இருந்த முருகன் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து டிஜிபி உத்தரவின்பேரில் விசாகா குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குழு சரியாக செயல்படவில்லை என அந்தப் பெண் காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தெலங்கானா மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.


Advertisement

இந்த உத்தரவுக்கு எதிராக முருகன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்த பெண் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசு பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close