ஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜெயலலிதாவின் பையோபிக் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கங்கனா ரணாவத், உருவமாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பகிரப்படுகிறது.


Advertisement

‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்குனர் விஜய், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கங்கனா மற்றும் படக்குழு சென்றுள்ளது. லுக் டெஸ்ட் படங்களை படக்குழு சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. அந்தப் படங்கள் வைரலானது.

    


Advertisement

மேலும், இதுதொடர்பாக கங்கனா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி, “இப்படிதான் உருவத்தை மாற்றுவதற்கான மேக் அப் செய்கிறார். ஒரு நடிகைக்கு இது எளிதான விஷயம் அல்ல. பார்ப்பதற்கே எங்களுக்கு சங்கடமாக இருந்த போதும், அவர் மிகவும் அமைதியாக இருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.

    

loading...

Advertisement

Advertisement

Advertisement