அமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியீடு - புறக்கணிக்கப்பட்ட புகழேந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் புகழேந்தியின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அமமுக செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ வெற்றி வேல், முன்னாள் அமைச்சர் வெற்றிவேல் மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 14 பேர் கொண்ட பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஆனால் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அமமுகவில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.


Advertisement

முன்னதாக, கோவையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சியினருடன் புகழேந்தி பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் ''இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்'' எனப் பேசியிருந்தார். இதனால் அவர் அமமுகவில் இருந்து வெளியேறலாம் என செய்திகள் கசிந்தன.

loading...

Advertisement

Advertisement

Advertisement