திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என்பதால் அதை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.
இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த அபராத உயர்வுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''திருத்தியமைக்கப்பட்ட வாகனச்சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என எங்கள் மாநிலத்தின் அரசு அதிகாரிகள் கருதுவதால் இதை இங்கு அமல்படுத்தமாட்டோம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நாங்கள் எதிர்த்தோம். பணம் ஒரு தீர்வை ஏற்படுத்தாது. மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ‘சேஃப் டிரைவ் சேவ் லைஃப்’ என்ற பிரசாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் விபத்துகள் குறைந்துள்ளது” என தெரிவித்தார்.
Loading More post
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!