சென்டிமென்ட்களால் நிறைந்தது கோலிவுட். பூஜைக்கு பூ வாங்குவதில் இருந்து பூசணிக்காய் உடைப்பது வரை எல்லாவற்றிலும் உண்டு ஏகப்பட்ட சென்டிமென்ட். பட டைட்டிலை கூட நெகட்டிவாக வைக்கமாட்டார்கள். பிச்சைக்காரன்,
சைக்கோ, எமன் என்று பெயர் வைத்ததெல்லாம் சமீபகால புரட்சிதான். இப்படி சில இயக்குனர்கள் சென்டிமென்ட்டை உடைத்தாலும் சினிமாவில் இருந்து முழுவதுமாக அதை நீக்கிவிட முடியாது என்கிறார்கள் இயக்குனர்கள்.
சமீபத்தில் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது, ஒரு சின்சியர் சென்டிமென்ட். அதற்கு ’கார்த்தி சென்டிமென்ட்’ என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.
அதாவது, அவர் நடிக்கும் படத்தை இயக்கினால், அடுத்தப் படத்திலேயே பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான் அந்த சென்டிமென்ட்! இதற்கு ஆதாரமாக ஒரு லிஸ்ட்டையும் புரட்டி எடுத்து நீட்டுகிறார்கள்.
’வெண்ணிலா கபடி குழு’ படத்துக்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய படம், ‘நான் மகான் அல்ல’. கார்த்தி நடித்திருந்தார். இந்தப் படம் முடிந்ததுமே அடுத்து விக்ரம் நடித்த ’ராஜபாட்டை’யை இயக்கினார். ஒளிப்பதிவாளர் சிவா, தெலுங்கு படங்களை இயக்கிவிட்டு கார்த்தியின் ’சிறுத்தை’ மூலம் தமிழில் டைரக்டர் ஆனார். அடுத்தப் படத்திலேயே அஜீத்தின் ’வீரம்’ வாய்ப்பு. பிறகு அஜீத்-சிவா காம்பினேஷன் ’விஸ்வாசம்’ வரைத் தொடர்ந்தது.
பா.ரஞ்சித், கார்த்தியின் ’மெட்ராஸ்’ படத்தை இயக்கினார். அடுத்து ரஜினியின் ’கபாலி’ வாய்ப்புக் கிடைத்தது. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத், அடுத்து அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்போதும் அஜீத் படத்தை இயக்க இருக்கிறார். கார்த்தியின் ’கைதி’ படத்தை இயக்கியுள்ள ’மாநகரம்’ லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
’இப்ப சொல்லுங்க... இந்த சென்டிமென்ட் சரிதான?’ என்று கேட்கிறார்கள்.
கார்த்தியின் அடுத்த படத்தை ’ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இவரும் அடுத்து பெரிய ஹீரோ ஒருவரது படத்தை இயக்குவார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க...?
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'