விழுப்புரத்தில் திருமண வீட்டில் மாப்பிள்ளையின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது தீவனூர். இந்தக் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த இரண்டாம் தேதி அதிகாலை இரண்டு மணி அளவில் அங்கு நடைபெறவிருந்த திருமண புதுமாப்பிள்ளையின் ஆண்ட்ராய்டு செல்போன் காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக திருமண மண்டப உரிமையாளர் சௌந்தரராஜன் இடம் முறையிட்டபோது, அந்த மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காட்சிகளை சோதித்து பார்த்துள்ளார்.
அதில், திருமணத்திற்கு வந்தவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திருமண மண்டபத்திற்குள் நுழையும் இரண்டு இளைஞர்கள் மாப்பிள்ளை அறைக்குள் சென்று அங்கிருந்த செல்போன் மற்றும் பிற பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. அதில் ஒரு இளைஞர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து திருமண மண்டப உரிமையாளர் திண்டிவனம் ரோஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.
Loading More post
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!