நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த சரமாரி கேள்விகள்..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ப.சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சிபிஐக்கு எதிராக பல சரமாரி கேள்விகளை முன்வைத்தார். 


Advertisement

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையை முடித்து கொண்டு ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தியுள்ளனர். 

அப்போது விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்தது. வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது. 


Advertisement

இதையடுத்து தனது வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு ஏற்கெனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் ஏற்கெனவே விசாரணை முடிவுற்ற நிலையில் தற்போது காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சம்மன் அளிக்கப்பட்டபோதெல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறையினரிடம் சிதம்பரம் ஆஜரானார் எனவும் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் கேட்கப்பட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கெனவே கேட்கப்பட்டவை எனவும் குறிப்பிட்டார். “வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எங்கே? ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் எதிர்ப்பார்ப்பது கேள்விகளையா? அல்லது பதில்களையா? பணம் கொடுத்ததாக கூறியுள்ளனர். யார் கொடுத்தது? எங்கு கொடுத்தனர்? என சிபிஐயிடம் கேட்க வேண்டும். ப.சிதம்பரம் ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழிக்க பார்த்தார் என்ற சிபிஐ வாதத்தை ஏற்க முடியாது. 24 மணி நேரமாக ப.சிதம்பரம் தூங்கவில்லை. ஆதாரங்கள் அடிப்படையில் இங்கு வழக்கு நடக்கவில்லை. வேறு எதற்காகவோ நடக்கிறது” என வாதாடினார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement