’கைதுக்கு பயப்படவில்லை, 3 நாளில் சரண்டர் ஆவேன்’: ’ஏகே 47’ எம்.எல்.ஏ வீடியோ பேட்டி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘நான் கைதுக்கு பயப்படவில்லை, இன்னும் மூன்று நான்கு நாட்களில் சரண்டர் ஆவேன்’ என்று வீட்டில் ஏ.கே.47 வைத்திருந் ததாக தேடப்பட்டுவரும் பீகார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.


Advertisement

பீகார் மாநிலம் மோகாமா ( Mokama) தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங். சுயேச்சை எம்.எல்.ஏவான இவரது மூதாதையர் வீடு, அதே மாவட்டத்தின் லட்மா கிராமத்தில் உள்ளது. அங்கு ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். 


Advertisement

அவர் மீது, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் அவர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் தப்பிவிட்டார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், அவர் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘’என் மூதாதையர் வீட்டுக்கு கடந்த 14 வருடங்களாக செல் வதில்லை. அதனால், நான் அங்கு ஏகே 47 துப்பாக்கி, வெடிகுண்டுகள் ஆகியவற்றைப் பதுக்கி வைத்திருந்தேன் என்ற கேள்விக்கே இடமில்லை. கைதுக்கு நான் பயப்படவில்லை. இன்னும் மூன்று நான்கு நாட்களில் சரண்டர் ஆவேன்’’ என்று தெரிவித்துள்ள அவர், தனக்கு எதிராக, கூடுதல் போலீஸ் எஸ்.பி., லிபி சிங் சதி செய்கிறார் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement