ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக தொடரப்பட்ட எட்டு அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.


Advertisement

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் கவர்னர் ரோசையா மற்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது எட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணை, எம்.பி எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


Advertisement

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடர்ந்த அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த ஒரு ஆவணங்களையும் ஆய்வு செய்யாமல் தன்னிச்சையாக இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளார். மேலும் அவதூறாகப் பேசியதாக தன்னை மட்டும் குறிவைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் எனவே  எட்டு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு எட்டு வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்  மற்ற தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளோடு,  இந்த வழக்கில் உள்ள விசாரணை நடைபெறும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement