[X] Close

யார் அந்த 90 ‘ரூட் தல’? - போலீஸ் ஆலோசனையில் கண்டுபிடிப்பு 

Subscribe
police-identified-90-root-thala-in-chennai

போலீசார் கல்லூரி முதல்வர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையில் 90 ரூட் தல யார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, நியூ கல்லூரி, மாநில கல்லூரி ஆகிய மூன்று கல்லூரி முதல்வர்களுடனும் தமிழக காவல்துறை ஆலோசனை நடத்தியது. இந்த ஆலொசனை கூட்டத்தில் சென்னையில் 6 ரூட்டில் செல்லும் பேருந்துகளில் 90 ‘ரூட் தல’ இருக்கின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் 6 மாதத்திற்கு எந்த தவறும் செய்யமாட்டேன் என உறுதி மொழி வாங்கவும் அவர்களின் பின்னால் இருந்து வேலை பார்க்கும் முன்னாள் மாணவர்களையும் கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

மேலும் அவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் 3 கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை பொதுமக்களுடன் நல்லுறவு மேற்கொள்ள அவர்களை டிராபிக் பணியில் ஈடுபடுத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close