பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்களும், சுமார் 40 ஆயிரம் பயங்கரவாதிகளும் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு துணை போனதால் பாகிஸ்தானுக்கு நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது. இதனால் கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளதால், அமெரிக்க அதிபர் டிரம்பை இம்ரான்கான் நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அமைதிக்கான அமைப்பின் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், தற்போது வரை தங்கள் நாட்டில் 40 பயங்கரவாத குழுக்களும் 40 ஆயிரம் பயங்கரவாதிகளும் இருப்பதாக ஒப்புகொண்டார்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதையும் ஒப்புக்கொண்ட இம்ரான் கான், இதற்கு முந்தைய அரசுகள், கடந்த 15 ஆண்டுகளாக உண்மை நிலவரத்தை அமெரிக்காவிடம் எடுத்துக் கூறவில்லை எனக் கூறினார். ஆனால், தமது தலைமையிலான அரசுதான் முதல்முறையாக பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக மத்திய அரசு பலமுறை புகார் கூறி வருகிறது. இந்நிலையில் இம்ரான் கான் உண்மையை ஒப்புகொண்டுள்ளார்.
Loading More post
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை