[X] Close >

பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல்? - ரயிலை கவிழ்க்க சதியா?

Plan-to-derail-train-in-pollachi

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

பாலக்காட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டது. 4.30 மணி அளவில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது மாக்கினாம்பட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் ரயில் சக்கரத்தில் சத்தத்துடன் உராய்வு ஏற்பட்டதால் அதை உணர்ந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இறங்கி வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் கல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டது.


Advertisement

இது தொடர்பாக திண்டுக்கல் ரயில்வே டிஎஸ்பி சுப்பிரமணி தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரகசியமாக முகாமிட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது தண்டவாளத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 

இதனையடுத்து பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த போலீசார், ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குடிபோதையில் மூவரும் இருப்பு பாதையில் கல் வைத்து சென்றதாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close