மாநிலங்களவைக்கு வைகோ தகுதியானவரா? - ஆய்வு செய்ய சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாநிலங்களவை பதவிக்கு வைகோ தகுதியானவரா என்பது குறுத்து ஆராய வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக வெங்கைய்யாவுக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு வைகோ தகுதியானவர்தானா என்பதை ஆய்வு செய்ய மாநிலங்களவை ஒழுங்குக் குழுவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

      


Advertisement

மேலும், அந்தக் கடிதத்தில் “இந்தி ஒரு வளர்ச்சி அடையாத மொழி. ரயில்வே அட்டவணையில் மட்டுமே அதுஅச்சிடப்பட்டுள்ளது என வைகோ முன்பு பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு அனைத்து இந்தியர்களுக்கும் அவமானம் ஆகும். அதேபோல், நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி எனவும் அதனை கற்பதில் எவ்வித பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுவும் நாட்டிற்கான அவமானம்.

அதனால், வைகோவை நீக்கம் செய்வது குறித்து தீர்மானம் கொண்டு வருவது குறித்து மாநிலங்களவை ஒழுங்கு குழு ஆராய வேண்டும்” என சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

முன்னதாக, வைகோ குறித்து சுப்ரமணியன் சுவாமி நேற்று தன்னுடைய ட்விட்டரில் விமர்சித்து இருந்தார். அதில், “வி.கோபால் சாமி என்ற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பின் தலைவரின் குழப்பமான கருத்தியல் மீது உடன்பாடு கொண்டவர். மிஷனரி கொள்கை உடைய இவர் மாநிலங்களவைக்குள் நுழைந்தால் அது இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும்” என்று அவர் கூறியிருந்தார்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement