டாஸ் வென்றது நியூஸிலாந்து : இங்கிலாந்து முதல் பவுலிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்றது.


Advertisement

உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசவுள்ளது.

இறுதிப்போட்டி என்பதால் அரங்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இரண்டு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளனர். இதுவரை இரண்டு அணிகளுமே ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பதால் இருநாட்டு ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement