“ராகுல் பேசாத கருத்தை பேசியதாக முதல்வர் கூறுகிறார்” - கே.எஸ்.அழகிரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசாத கருத்தை பேசியதாக தமிழக முதல்வர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார். 


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் எனவும் கர்நாடக தேர்தலின் போது ராகுல் காந்தி பேசியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசியதைக் சுட்டிக்காட்டினார். 

ராகுல் காந்தி அவ்வாறு பேசவில்லை எனத் தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, பேசாததை பேசியதாகக் கூறும் தமிழக முதலமைச்சர் அதற்கான ஆதாரத்தை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், முடியவில்லை என்றால் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement