மாநகராட்சி அலுவலகத்தில் ஆண் சடலம் - கொலையா ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை மாநகரட்சி வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் சட‌லம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


Advertisement

சென்னை மாநகராட்சி பொது ஊழியர்கள் சங்க அலுவலக மேற்கூறையில் ஆண் சடலம் ஒன்று கிடைந்துள்ளது. இந்தச்சடலத்தை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள் சிலர், பெரியமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடைந்துள்ளது. அந்த நபர் கழுத்தில் டெலிபோன் வயர்கள் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். 

இதையடுத்து ஊழியர்கள் சிலரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரண‌யில் அவர் மாநகராட்சி ஊழியர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக ராஜீவ்காந்தி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Advertisement

அத்துடன் கழுத்தில் வயர்கள் சுற்றப்பட்டு இறந்து கிடந்ததால் அவரை யாரேனும் கொலை செய்தார்களா ? என்று விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்தவர் வடநாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement