சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் 26 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் என்பது ஒரு உலோகம் என்பதையும் தாண்டி இந்திய மக்கள் மனங்களில் கலந்துவிட்ட ஒரு மங்கலப் பொருளாகவே மாறிவிட்டது. தங்கம், அணிந்து அழகு பார்க்க மட்டுமல்லாமல் அவசர கால பணத் தேவைக்கு உடனடியாக உதவும் சிறந்த முதலீடாக உள்ளது. தங்கத்தின் விலை கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக வியக்க வைக்கின்றன புள்ளிவிவரங்கள்.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 464 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 58 ரூபாய் விலை உயர்ந்து 3,271 ரூபாய்க்கும், ஒரு சவரன் 464 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 26,168 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் 992 ரூபாய் அதிகரித்ததன் மூலம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்க நினைக்கும் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் சர்வதேச சந்தை சூழல்களால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்