JUST IN

Advertisement

“ஆடுகளம் உங்களை இழந்து தவிக்கும்” - தவானுக்கு மோடி ஆறுதல் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மீண்டும் நீங்கள் களத்திற்கு வருவீர்கள் என்றும் நாட்டுக்காக நிறைய வெற்றிகளை குவிப்பீர்கள் என்றும் தவானுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அபாரமாக சதமடித்தார். அந்தப் போட்டியின்போது, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, தவானின் இடது கை பெருவிரலை பலமாகத் தாக்கியது. 


Advertisement

பின்னர், காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் பின்னர் காயம் சரியாகாததால் ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவார் என்றும் குறிப்பிட்டது.

தவானில் விலகல் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட ஷிகர்,  ''நம்முடைய நாட்டிற்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பினேன். நான் இப்போது சிகிச்சைக்காக  திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என உருக்கமாக தெரிவித்தார்.


Advertisement

தவானின் வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "அன்புள்ள தவான், ஆடுகளம் உங்களை இழந்து தவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் விரைவில் குணமாகி, மீண்டும் களத்திற்கு வருவீர்கள். நாட்டுக்காக நிறைய வெற்றிகளை குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement