நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்து முன்னாள் அதிபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எகிப்த் நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்துள்ளார். 


Advertisement

எகிப்த் நாட்டின் அதிபராக 2012ஆம் ஆண்டு முகமது மோர்சி தேர்வானர். இவரின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு மக்கள் பெரிய போராட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து  2013ஆம் ஆண்டு எகிப்த் ராணுவம் அதிபராக இருந்த மோர்சியை நீக்கியது. இதனையடுத்து அவர் மீது கத்தார் நாடிற்காக வேவு பார்த்தது, ஹமாஸ் மற்றும் ஹெசபுல்லா அமைப்புகளுக்காக வேவு பார்த்தது, நீதிமன்றத்தை அவமானபடுத்தியது, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 


Advertisement

இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது முகமது மோர்சி ஆஜராக நீதிமன்றம் வந்தார். அங்கு மயங்கி விழந்த அவரை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முகமது மோர்சி இறந்ததற்கு மாரடைப்பு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவரது இறப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement