“தன் ஆரோக்கியத்தை விட குழந்தைகள் நலனையே சிந்திக்கும் தந்தைகள்”

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக தந்தைகள் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று அப்பாக்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. 


Advertisement

குழந்தைகளுக்கு எப்போதும் அவர்களது அப்பா தான் முதல் ஹீரோ. அன்பை அழுத்தமாகவும், எளிமையாகவும், ஆழமாகவும் பதிவு செய்பவர் அவர்களுக்கு நிகர் அவர்களே... முடியாது என்பதை முடியும் என்று உணர்த்தி காட்டுவதும் தந்தையின் அன்பு தான். குடும்பத்துக்காக என்றும் உழைக்கும் ஒரு ஜீவன் அம்மா என்றால் அதனை ஓய்வுன்றி சுழல வைக்கும் பெரும் பங்கு அப்பாக்களுக்கு தான். தங்கள் பிள்ளைகள் மேல் பொழியும் அப்பாக்களின் அன்பு மட்டும் என்றும் மாறாது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அப்பாக்களை போற்ற 'தந்தையர் தினம்' கொண்டாடப்படுகிறது. 

Image result for தந்தையர் தினம்


Advertisement

உலக தந்தையர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுதொடர்பாக தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. சுமார் ஆயிரத்து 300 அப்பாக்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 19 சதவிகித தந்தைகள் மட்டுமே தங்கள் நலனில் அக்கறை கொள்வதாகவும், மற்றவர்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையே சிந்தித்து தங்கள் நலனை தியாகம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Image result for தந்தையர் தினம்

மேலும் இளைய தந்தைகள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டாமல் குழந்தைகளின் நலனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement