[X] Close >

மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

Visit-to-Maldives--Sri-Lanka-will-strengthen-ties-says-PM-Modi

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். அதைத்தொடர்ந்து அவர் மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகளுக்கு செல்கிறார்.


Advertisement

பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, முதல் அரசுமுறை பயணமாக இன்று மாலத்தீவு செல்கிறார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல துறை சார்ந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலி பதவியேற்புக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பிரதமர் மோடி மாலத்தீவு சென்றிருந்தார்.


Advertisement

மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இலங்கை செல்கிறார். இந்த வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்திய கடல்எல்லையை ஒட்டியுள்ள நாடுகளுடனான உறவு மேம்படும் என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பிறகு இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பும் பிரதமர் நேரடியாக திருப்பதி சென்று, ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பிரதமருடன் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close