உலகக் கோப்பையின் முதல் லீக் போடியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை போட்டி இன்று இங்கிலாந்தின் லண்டனில் தொடங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. லண்டனில் உள்ள கென்னிங்க்டான் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி முதல் பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
இங்கிலாந்து அணியில் பவுலர்கள் டாம் குரான், மார்க் உட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அதில் ரஷித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ் மற்றும் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் சேர்க்கப்படவில்லை. ஜே.பி.டுமினி மற்றும் பெஹ்லுக்வயோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரரான பேரிஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?